Madras University Recruitment 2023: சென்னைப் பல்கலைக்கழகத்தின் சட்ட படிப்பு துறையின் (Department of Legal Studies, University of Madras )
பகுதி நேர / முழு நேர கெளரவ பேராசியர் பணிக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


கெளரவ விரிவுரையாளர் (பகுதிநேரம்)


கெளரவ விரிவுரையாளர் (முழு நேரம்)


உதவி ஆராய்ச்சியாளர்


கல்வித் தகுதி



  • இந்தப் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும். 

  • முதுகலை படிப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • NET / SLET  ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வு இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். 

  • பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு இதழ்களில் கட்டுரைகள் பிரசுரமாகி 75 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 


எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.08.2023


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


The Registrar, University of Madras,


Chepauk,


Chennai 600 005. 


******


சமூக பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு - சென்னை


தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மாநகர சமூக பாதுகாப்பு பிரிவில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


Programme Officer - PO 


Assistant cum Data Entry Operator - DEO 


கல்வித் தகுதி:



  • PO பணியிடத்திற்கு விண்ணப்பிக்க Social Work /Sociology/ Child Development/Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management உள்ளிட்ட இந்த ஏதேனும் துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • இளங்கலை படித்தவர் என்றால் Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management இந்த துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • DEO  பணிக்கு விண்ணப்பிக்க +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.


வயது வரம்பு


PO பதவிக்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 


DEO - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


Programme Officer - PO - ரூ.34,755/-


Assistant cum Data Entry Operator - DEO -ரூ.13,240/-


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க https://urxl.com/SCPS2023 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். தொடர்புக்கு - recruitmentscps@gmail.com


விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.08.2023 மாலை 5.30 வரை 


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/announcement/2023_TNSCPS_vacant_recruitment.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.