சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஓட்டுநர்’ பணிக்கு நேரடி தேர்வின் மூலம் தகுதியானவர் தெரிவு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

ஓட்டுநர்

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 18-வயது பூர்த்தி செய்தவராகவும் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 01.07.2024 ம் தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்க கூடாது.
  • அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள் 01.07.2024 அன்று 42 வயது நிறைவடையாத அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்காலி பணியாளர்கள் அறிவிப்பு தேதி வரை தொடர்ச்சியாகவோ அல்லது தொடர்ச்சியாக அல்லாமலோ அரசுப் பணியில் இருந்த காலத்தை அவர்களுடைய வயதிலிருந்து கழித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

ஊதிய விவரம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.19,500 முதல் ரூ. 71,900 வரை வழங்கப்படும். 

விண்ணப்ப கட்டணம்

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.500 ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

பழங்குடியின / பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தெரிவு செய்யும் முறை

இதற்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2024

தகுதித் தேர்வின் பாடத்திட்டம், இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.3%20of%202024%20dt.15.01.2024%20in%20TAMIL.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

சென்னையில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் கோயிலில்  காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி தேதியாகும்.

பணி விவரம்

  • நூலகர்
  • அலுவலக உதவியாளர்
  • ஓட்டுநர்
  • உதவி மின் பணியாளர் 

கல்வித் தகுதி

  • நூலகர் பணிக்கு 10-வது தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • உதவி மின் பணியாளர் பணிக்கு மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

  • நூலகர் - ரூ.18,500 - ரூ.58,600/-
  • அலுவலக உதவியாளர்- ரூ.18,500 - ரூ.58,600/-
  • ஓட்டுநர் - ரூ.18,500 - ரூ.58,600/-
  • உதவி மின் பணியாளர் - ரூ.16,600 - ரூ.52,400/-

இதர நிபந்தனைகள்

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

கபாலீசுவரர் கோயில்,

மயிலாப்பூர்,

சென்னை - 04

விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.01.2024  மாலை 5.45 வரை 

வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு - https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.