சென்னை உயர் நீதிமன்றத்தில் கீழ் உள்ள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
- நகல் பரிசோதகர்
- நகல் வாசிப்பளர்
- முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்
- இளநிலை கட்டலை நிறைவேற்றுனர்
- கட்டளை எழுத்தர்
- ஒளிப்பட நகல் எடுப்பவர்
- ஓட்டுநர்
- அலுவலக உதவியாளர்
- தூய்மைப் பணியாலர்
- தோட்டப் பணியாளர்
- காவலர் / இரவு காவலர்
- இரவு காவலர் மற்றும் மசால்ஜி
- காவலர் மற்றும் மசால்ஜி
- தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி
- வாட்டர்மென் / வாட்டர்வுமன்
- மசால்ஜி
கல்வித் தகுதி:
- நகல் பரிசோதகர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு அல்லது உயர்நிலைப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஒளிப்பட நகல் எடுப்பவர் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, 6 மாதங்களுக்கு குறையாத செய்முறை முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டர் வாகனச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் ஓட்டுவதற்குரிய செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்களுக்கு குறையாமல் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- நகல் பிரிவு உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- தூய்மை பணியாளர். தோட்டப் பணியாளர், காவலர், காவலர் மற்றும் மசால்ஜி, துப்புரவு பணியாளர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென், வாட்டர் வுமென், மசால்ஜி ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- நகல் பரிசோதகர் - ரூ.19,500 -71,900/-
- நகல் வாசிப்பளர் -ரூ.19,500 -71,900/-
- முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் -ரூ.19,500 -71,900/-
- இளநிலை கட்டலை நிறைவேற்றுனர் -ரூ.19,500 -71,900/-
- கட்டளை எழுத்தர் - ரூ.16,600 -60,800/-
- ஒளிப்பட நகல் எடுப்பவர் -ரூ.16,600 -60,800/-
- ஓட்டுநர் --ரூ.19,500 -71,900/-
- அலுவலக உதவியாளர் - ரூ.15,700 -58,100/-
- தூய்மைப் பணியாலர் -ரூ.15,700 -58,100/-
- தோட்டப் பணியாளர் -ரூ.15,700 -58,100/-
- காவலர் / இரவு காவலர் -ரூ.15,700 -58,100/-
- இரவு காவலர் மற்றும் மசால்ஜி -ரூ.15,700 -58,100/-
- காவலர் மற்றும் மசால்ஜி -ரூ.15,700 -58,100/-
- தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி - ரூ.15,700 -58,100/-
- வாட்டர்மென் / வாட்டர்வுமன் -ரூ.15,700 -58,100/-
- மசால்ஜி -ரூ.15,700 -58,100/-
விண்ணப்பிக்கும் முறை:
https://mhc.tn.gov.in/recruitment/login -என்ற இணையதளத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை:
பொது எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.06.2024
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - 28.06.2024
விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://mhc.tn.gov.in/recruitment/notification_dist - என்ற இணைப்பை க்ளிக் செய்து தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு விவரத்தை காணலாம்.