அரசுப்பணிக்காக இளைஞர்கள் பலர் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்காகவே பல்வேறு வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் வரும் வாரத்தில் பல்வேறு அரசுப்பணி மற்றும் தேர்வுகள் எப்போது மற்றும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.


பஞ்சாப் தேசிய வங்கியில்  145  Specialist officer பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்பணிக்கு http://www.pnbindia.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக வருகின்ற மே 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


ஒருங்கிணைந்தப் பொறியியல் பணிகள்:


டிஎன்பிஎஸ்சியில் 625 பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.


இப்பணிக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – மே 3,2022


மத்திய ஆயுதப்படையில் உதவி கமாண்டன்ட் பணி:


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய ரிசர்வ் காவல்படை, எல்லைப்பாதுகாப்பு படை, இந்தோஜ திபெத்திய எல்லைக்காவல்படை, மத்திய தொழிலக காவல்படை, சிறப்பு சேவை பணியகம் ஆகிய ஆயுத காவல்படைகளில் காலியாக உள்ள 253 உதவி கமாண்ட் பணிகள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இப்பணியிடங்களுக்கு https://upsconline.nic.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – மே 10, 2022 மாலை 6 மணிக்குள்


மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரகசிய அதிகாரி:


மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரகசியப் பிரிவில் உதவி ரகசிய அதிகாரிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரகசியப் பிரிவில் உதவி ரகசிய அதிகாரி கிரேடு II – தொழில்நுட்பம் சார்ந்த பணி என 150 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.


இப்பணியிடங்களுக்கு https://mharecruitment.in/notification_mha.aspx என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – மே 7, 2022





பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேளாண் விற்பனை அதிகாரி:


பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேளாண் விற்பனை அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/notification-reopening-of-application-window-for-10-locations-05-16.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 26, 2022 இரவு 11.59 மணி.


மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி இந்திய பொருளாதார சேவை மற்றும் புள்ளியியல் சேவை எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.upsconline.nic.in/  என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ள வேண்டும்.


ஜேஇஇ முதன்மைத் தேர்வு 


இந்த 2022 ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் தொடங்கியுள்ளது. https://www.nta.ac.in/ இப்பக்கத்தின் மூலம்  மீண்டும் நீங்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


கடைசி தேதி- ஏப்ரல் 25, 2022


மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கு ( CUET -UG) https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக வருகின்ற  மே 6 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


குறிப்பாக பெரும்பாலான விண்ணப்பங்கள் டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட்டுளளதாகவும், தென் மாநிலங்களில் விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாக உள்ளதென தரவுகள் சுட்டிக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.


ஆசிரியர் தகுதித்தேர்வு:


ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இதற்கு பிஎட் இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள நபர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால் அனைத்துப்பணியிடங்களும் ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் நிச்சயம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும். எனவே இதுப்போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்துக்கொள்ளுங்கள்.