பரோடா வங்கியில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புகள்.. உடனே செக் பண்ணி விண்ணப்பிங்க..

பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Continues below advertisement

பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேளாண் விற்பனை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

Continues below advertisement

பாங்க் ஆப் பரோடா வங்கி ( Bank of Baroda)  என்பது இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாகும். இவ்வங்கி தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவ்வங்கியில் வேளாண் விற்பனை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேளாண் அதிகாரிப்பணிக்கானத் தகுதிகள்:

மாநிலம் வாரியாக காலிப்பணியிட விபரங்கள்:

பாட்னா மண்டலம்  - 4

சென்னை மண்டலம் -  3

மங்களூரு மண்டலம் - 2

புது டெல்லி - 1

ராஜ்கோட் -  2

சண்டிகர் -  4

எர்ணாகுளம் -  2

கொல்கத்தா -  3

மீரட் -  3

அகமதாபாத் -  2

கல்வித்தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, பால், மீன்வளம் அறிவியல், வேளாண்மை கூட்டுறவு, உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதோடு வேளாண் வர்த்தகம் போன்ற துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்றுக்குள் 25 வயதைக்கடந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், ஆன்லைன் வாயிலாக மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.bankofbaroda.in/career.htm என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 11.59 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக ஆன்லைன் வாயிலாக மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், தொழில்நுட்ப சிக்கல்கள் அதிகளவில் எழக்கூடும். எனவே  ஆர்வமுள்ள இளைஞர்கள் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்புக்குறித்த கூடுதல் விபரங்களை, https://www.bankofbaroda.in/career.htm என்ற இணையதளவாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola