திருவள்ளூரில் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம் :
முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் (STLS)
ஆய்வுக்கூட நுட்புனர் (LT)
சுகாதார பார்வையாளர் (காசநோய்) (TBHV)
பணி காலம் : 11 மாதங்கள்.
கல்வித் தகுதி :
- முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் பணிக்கு +2 , இளநிலைப்படிப்பு மற்றும் மருத்துவக்கல்வி இயக்குநர் கையொப்பனிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆய்வுக்கூட நுட்புனர் பணிக்கு +2 தேர்ச்சி அல்லது ஆய்வுக்கூட துறையில் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
- சுகாதார பார்வையாளார் பணிக்கு +2 படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சுகாதார பணியாளர் அனுபவம் அல்லது உதவிமகப்பேறு செவிலியர் அல்லது காசநோய் சுகாதார பணியாளர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Senior Treatment Lab Supervisor காலியிடங்கள் - மாதம் ரூ.19,800
Lab Technician - மாதம் ரூ. 13,000
TB Health Visitor - மாதம் ரூ.13,300 தகுதி:
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத் தாளில் தயார் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை இயக்குநர், மருத்துவப் பணிகள்(காசநோய்),
மாவட்ட காசநோய் மையம்,
பூவிருந்தவல்லி, சென்னை - 600 056
மேலும் விவரங்கள் அறிய www.tiruvallur.nic.in என்ற இணைப்பினை க்ளிக் செய்து காணலாம்.