எல்ஐசி(LIC) நிறுவனத்தில் பகுதி நேர காப்பீட்டு ஆலோசகர் (Part time Insurance Adviser) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
நம்மில் பலர் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தோம் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது எல்ஐசி இன்சுரன்ஸ் தான். அந்தளவிற்கு இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ள பொதுத்துறை நிறுவனம் தான் எல்ஐசி. குழந்தைகள்,பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு சிறப்பான திட்டங்களை வழங்கிவரும் நிலையில் பலர் இதன் மூலம் பயன்பெற்றுவருகின்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டுவரக்கூடிய மத்திய அரசு நிறுவனமான எல்ஐசியில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் தான் மக்களுக்கு எல்ஐசி காப்பீடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பதற்காக, தற்பாது எல்ஐசி நிறுவனத்தில் பகுதி நேர காப்பீட்டு ஆலோசகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதோடு மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கானத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
LIC யில்பகுதி நேர காப்பீட்டு ஆலோசகர் பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள்: 100
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற நினைக்கும் விண்ணப்பதாரர்கள், https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=AOaXoVmjNHY%3D&RowId=AOaXoVmjNHY%3D&OJ= என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித தவறில்லாமல் நிரப்ப வேண்டும்.
இறுதியில் அனைத்து தகவல்களும் சரியானதா? என்பதை சரிப்பார்த்தப் பின்னர் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: மார்ச் 3, 2022
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம்:
எல்ஐசி நிறுவனப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் ரூபாய் 6ஆயிரம் முதல் 7 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=AOaXoVmjNHY%3D&RowId=AOaXoVmjNHY%3D&OJ= என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாகத் தெரிந்துக்கொள்ளலாம்.