மத்திய நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தொழில்துறையில் முன்னேற்றமடைய தர நிர்ணய முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின்  மூலம் நுகர்வோர் நலன், உணவு , பொதுவிநியோகம் போன்றவற்றின் தரத்தை நிர்ணயம் செய்வதிலும், மதிப்பிடுவதற்கும் மற்றும் தரச்சான்று வழங்கும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. இதோடு தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்தவும், நுகர்வோரிடையே தரமான மின் பொருட்களை உபயோகிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகள் செயல்பட்டுவருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர்களும், சென்னையில் மண்டல இணை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள், அனைத்துப்பொருள்களையும் தர நிர்ணயம் செய்து மக்களிடம் விநியோகம் மேற்கொள்வதற்கான சான்றிதழ்களை வழங்குவார்கள். ஒருவேளை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறினால் நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் எந்த நடிவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க முடியும். இவ்வாறு இதில் ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது  மத்திய நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும், இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பி பிரிவில் 21 பொறியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கு விண்ணப்பிக்க என்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.


இந்திய தரக்கடடுப்பாட்டு நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் – 22


காலிப்பணியிட விபரங்கள்:


சிவில் இன்ஜினியரிங்- 11


கெமிக்கல் இன்ஜினியரிங்- 4


டெக்ஸ்டைஸ் இன்ஜினியரிங்- 2


எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் – 5


கல்வித்தகுதி:


மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.


இதோடு 2020/2021 ல் GATE தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 28.02.2022 தேதியின் படி 21-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.bis.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


இதோடு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


 தேர்வு முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை,www.bis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளுங்கள்.