எல்.ஐ.சி-யில் ஹெளசிங் ஃபைனான்ஸ் (Housing Finance Ltd) நிறுவனத்தில் உள்ள ஜூனியர் உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ஜூனியர் உதவியாளர்
தமிழ்நாட்டில் 10 இடங்களும், புதுச்சேரியில் 1 இடங்களும், தெலுங்கானாவில் 31 இடங்களும், கர்நாடகாவில் 38 இடங்களும், ஆந்திர பிரதேசத்தில் 12 இடங்கள் உள்ளன.
மொத்த பணியிடங்கள் - 200
கல்வித் தகுதி விவரம்:
ஜூனியர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024-ன் படி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவு ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
Probation காலம் ஆறு மாதம் ஆகும்.
கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
எல்.ஐ.சி-யில் உள்ள ஜூனியர் உதவியாளர் பணியிடங்களுக்கு 01.07.2024 ஆம் தேதியின் படி, 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
எல்.ஐ.சி-யில் உள்ள ஜூனியர் உதவியாளர் பதவிக்கு அடிப்படை ஊதியமாக ரூ.20,000 ஆகும். குறைந்தபட்சம் ரு.32,000 முதல் ரூ.35,200 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு ஆன்லைன் வழியில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்:
விண்ணப்பிக்க கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.800 ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. 18% உடன் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://ibpsonline.ibps.in/licjajul24/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2024
ஆன்லைன் தேர்வு நடைபெறும் உத்தேசிக்கப்பட்ட தேதி - செப்டம்பர், 2024
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை காண https://www.lichousing.com/static-assets/pdf/Detailed_Advertisement_Recruitment_of_Junior_Assistants_2024.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.