வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கு  வேலை வாய்ப்பு 


பொதுத்துறையில் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 17 வங்கி அதிகாரி மற்றும் 51 கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, விளையாட்டு வீரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பினால், தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


 கல்வித் தகுதி: 


ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


கூடைப்பந்து, கிரிக்கெட் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், பேட் மின்டன் போன்ற 8 துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப் பிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.


சர்வதேச, தேசிய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


பள்ளிகளுக்கு இடையிலான தேசிய போட் டிகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு: 


வங்கி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://sbi.co.in/web/careers


தேர்வு செய்யும் முறை: 


மதிப்பீடு தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் பணியமர்த்தப்படுவர். 


மற்ற வங்கிகளில் பணிபுரியும் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது. 


விண்ணப்ப கட்டணம்: 


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணமில்லை. 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2024 ஆகும். 


தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..


இந்தப் பணியிடங்களுக்கான கால அளவு 2 ஆண்டுகள் ஆகும்.


காலியிடங்கள்: 25 


கல்வித்தகுதி:


தொழிற்கல்வி படிப்புகளில் இளங்கலை முதல் வகுப்பில் தேர்ச்சி (பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம் மற்றும் கால்நடை அறிவியல்) அல்லது கலை/ அறிவியலில் முதுகலை பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி. தமிழ் மொழியில் பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது. 


வயது வரம்பு:


இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 22 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். குறிப்பாக எஸ்சி / எஸ்டி 35 வயது வரையும், பிசிஒபிசி பிரிவினர் 33 வயது வரையில் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை:


முதல் கட்ட தேர்வு (கணினி மூலம்), விரிவான தேர்வு (எழுத்துத்தேர்வு) மற்றும் நேர்முகத்தேர்வு.


விண்ணப்ப கட்டணம்:  கட்டணமில்லை.


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:


மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.08.2024 என  அறிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு.. 


தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் (டிஎன்எஸ்சி வங்கி) கட்டுப்பாட்டின் கீழ், பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


இதில் 23 பணியிடங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் ஒரு பணியிடம் டிஎன்எஸ்சி வங்கியிலும் நிரப்பப்படும்.


இந்த ஒப்பந்தப்பணிக்கான காலம் ஒரு வருடமாகும்.


மாத ஊதியம்: ரூ.25 ஆயிரம்


கல்வி தகுதி:


எம்பிஏ அல்லது அதற்கு சமமான படிப்பு, மார்க்கெட்டிங் மேனேஜ் மென்ட் கோ ஆப்ரேட்டிவ் மேனேஜ்மென்ட் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், ரூரல் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படித் வர்கள் விண்ணப்பிக்கலாம்.


நேரடி முறையில் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் :www.tnscbank.com


நேர்காணல், கடைசி தேதி: 06.08.2024 ஆகும்.