கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு:

Continues below advertisement

கரூர் வைஸ்யா வங்கியானது, இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வங்கியாகும்.  தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள ’Business Development Executive (CASA) ‘ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரம்:

Continues below advertisement

Liabilities Sales Channel பிரிவில் காலியாக உள்ள ’Business Development Executive (CASA) ‘பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

’Business Development Executive (CASA) ‘

கல்வித் தகுதி : 

  • குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விற்பனைப் பிரிவில் ஆர்வம் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் எழுத, படித்த தெரிந்திருக்க வேண்டும்.
  • பணி அனுபவம் இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • பணி சார்ந்த பயணங்கள் மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இதற்கு வங்கியில் கொள்கை, திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். மருத்துவ காப்பீடு உள்ளிட்டவைகளும் வழங்கப்படும். 

வயது வரம்பு  : 

இதற்கு அதிகபட்சமகா 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

இதற்கு நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் :

இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

கரூர் வைஸ்யா வங்கியின்  இணையதளமான Karur Vysya Bank - KVB- https://www.kvb.co.in/- க்கு செல்லவும்.

’Career ‘என்பதை தேர்வு செய்யவும்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை படித்து தெரிந்த பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கடைசி தேதியான பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க - https://www.kvblimited.com/psc/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM_FL.HRS_CG_SEARCH_FL.GBL?FOCUS=Applicant&SITEID=1&Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1

விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். 

விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்; அல்லது https://www.kvb.co.in/ லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

தேர்தெடுக்கப்படும் முறை: 

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2023

அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு https://drive.google.com/file/d/15Lnvty-77ZvPITfCWlkks42XC20FrCrU/view-என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

கவனிக்க..

விண்ணப்பதாரர்கள் தங்களது தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை சரியாக கொடுக்கவும். 

நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ


இதையும் படிக்கலாமே..

Group 4 Result 2023: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!

CUET UG 2023: மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர வேண்டுமா?- விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி..