காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி/ நடுநிலைப்பள்ளி /உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில்  காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது

   மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, தகவல் தெரிவித்து உள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி/ நடுநிலைப்பள்ளி/உயர்நிலைப் பள்ளி /மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி  ஆசிரியர் பணியிடம் காலியாகவுள்ளது. இடைநிலை ஆசிரியர் 15 பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) 1 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கணிதம்;) 1 பணியிடமும் ஆக மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் காஞ்சிபுரம் மாவட்ட ui ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்,  மற்றும்  காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.


மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான  ஊதியம் இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7,500/-,  பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000/- மற்றும்  முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.12,000/- வீதம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடைநிலை ஆசிரியர் /  பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்களுக்கான தகுதி விவரம் :


தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(வுநுவு). இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி விவரம்:


முதுகலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம்  மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) அந்த ஒன்றியத்திற்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) அந்த மாவட்டத்திற்கு எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை  அளிக்கப்படும்.


 மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2023 மாதம் வரையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் பிப்ரவரி 2023 மாதம் வரையிலும், தற்காலிகமாக நிரப்பப்படும். பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், காஞ்சிபுரம் மற்றும திருப்பெரும்புதூர்; ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட காலிப்பணியடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணத்தினை உரிய கல்வித் தகுதிச் சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ காஞ்சிபுரம்; மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 18.01.2023 மாலை.5.45 க்குள் ஒப்படைத்திட இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி, தெரிவித்துள்ளார்கள்.