காஞ்சிபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் சார்பில் மாவட்ட நலச்சங்கம் (District Health Society) மூலமாக நகர் புற நலவாழ்வு மையத்திற்கு, காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.


எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பு ?


காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நகர் புற நலவாழ்வு மையத்திற்கு (UHWC) மருத்துவ அலுவலர் (Medical Officer)-6, நர்ஸ் பணியாளர் (Staff Nurse)-6, பல்நோக்கு சுகாதார பணியாளர் (MPHW (HI Gr-II)-6, மற்றும் ஆதரவு ஊழியர் (Support Staff/ Hospital Worker)-6 ஆகிய 24 பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு (Notification) அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவமானது நிர்வாக செயலாளர், மாவட்ட நலச்சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன ?


பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 24.03.2025 அன்று மாலை 05.45 மணிக்குள், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.