அரசு வேலை வேணுமா? TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவசப் பயிற்சி; கலந்துகொள்வது எப்படி?

பயிற்சியில்‌ சேர விரும்பும்‌ ஆர்வலர்கள்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மைய இணைய தளமான www.cecc.in வாயிலாக 25.03.2025 வரை விண்ணப்பிக்கலாம்‌.

Continues below advertisement

படித்த இளைஞர்கள்‌ வேலை வாய்ப்பு பெறும்‌ வகையில்‌ TNPSC, SSC, IBPS, RRB, etc போட்டித்‌ தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள்‌ நடத்தும்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ கலந்து கொள்ளும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின்‌ சார்பில்‌ இயங்கும்‌ திண்டுக்கல்‌ மாவட்டம்‌, ஒட்டன்சத்திரம்‌, காளாஞ்சிப்பட்டி கிராமம்‌, கலைஞர்‌ நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மையத்தில்‌ கட்டணமில்லாப்‌ பயிற்சி வகுப்புகள்‌ 200 ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகிறது .

வார வேலை நாட்களில்‌ ஆறு மாத பயிற்சி

மேற்படி போட்டித்‌ தேர்வுகளில்‌ கலந்து கொள்ளும்‌ ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள்‌ பெற்று புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள்‌ முற்பகல்‌ 10.00 மணி முதல்‌ 1.00 மணி வரை ஆறு மாத காலம்‌ வாராந்திர வேலை நாட்களில்‌ நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில்‌ சேர விரும்பும்‌ ஆர்வலர்கள்‌ குறைந்தபட்சம்‌ 10 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌. மேற்படி, போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மையங்களில்‌ உணவும்‌ தங்கும்‌ வசதிகளும்‌ இல்லை.

மார்ச் 25 வரை விண்ணப்பிக்கலாம்

பயிற்சியில்‌ சேர விரும்பும்‌ ஆர்வலர்கள்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மைய இணைய தளமான www.cecc.in வாயிலாக 25.03.2025 வரை விண்ணப்பிக்கலாம்‌. கூடுதல்‌ விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில்‌ பார்த்து தெரிந்து கொள்ளலாம்‌. 

தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

பத்தாம்‌ வகுப்பில்‌ பெற்ற மதிப்பெண்களின்‌ அடிப்படையில்‌ தமிழக அரசால்‌ நடைமுறைபடுத்தப்பட்டுள்ள‌ இனவாரியான இடங்களுக்கு ஏற்பத் தேர்வர்கள்‌ தெரிவு செய்யப்பட்டு, ஆர்வலர்களின்‌ விவரங்கள்‌ மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌, ஏப்ரல்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ பயிற்சி வகுப்புகள்‌ தொடங்கப்படும்‌ என்று கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌/ பயிற்சித்‌ துறை தலைவர்‌ தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://admission.cecc.in/register என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வர்கள் தங்களின் விண்ணப்பப் பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். https://www.cecc.in/latest/13 என்ற இணைப்பில் கூடுதல் விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 

மேலும்‌ விவரங்களுக்கு 04553 - 291269 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்‌.

கூடுதல் தகவல்களுக்கு: www.cecc.in

Continues below advertisement
Sponsored Links by Taboola