திண்டுக்கல் சகி - ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு விடுத்துள்ளார். ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்துக்கு 10,000 முதல் 18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Jobs: திண்டுக்கல் சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?


இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி - ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (Sakhi-One Stop Centre) வழக்குப் பணியாளர்-1, வழக்குப் பணியாளர்-2, பாதுகாவலர்-1. பாதுகாவலர்-2. பல்நோக்கு உதவியாளர்-1. பல்நோக்கு உதவியாளர்-2 ஆகிய பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வழக்குப் பணியாளர்-1 பணியிடத்திற்கு திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளில் தலா ஒரு பணியிடம் என 2 காலிப்பணியிடங்களும், வழக்குப் பணியாளர்-2 பணியிடத்திற்கு பழனி பகுதியில் 3 காலிப்பணியிடங்ளும் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.


Pope Francis: உலகளாவிய கிறிஸ்துவர்கள் பெரும் சோகம் - போப் ஃப்ரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம், என்ன ஆச்சு?


பாதுகாவலர்-1 பணியிடத்திற்கு பழனி பகுதியில் ஒரு காலிப்பணியிடமும், பாதுகாவலர்-2 பணியிடத்திற்கு திண்டுக்கல் பகுதியில் ஒரு காலிப்பணியிடமும் என இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.




பல்நோக்கு உதவியாளர்-1 பணியிடத்திற்கு பழனி பகுதியில் ஒரு காலிப்பணியிடமும், பல்நோக்கு உதவியாளர்-2 பணியிடத்திற்கு திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளில் தலா ஒரு பணியிடம் என 2 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும். இப்பதவிக்கான விண்ணப்பம், கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைதளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்-624004 என்ற முகவரிக்கு வரும் 20.03.2025 மாலை 05.45-க்குள் அனுப்பிட வேண்டும் எனவும், தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.