Jobs Alert : திருவாரூர் மாவட்டத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
பணி விவரம்
திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்ள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 81 செவிலியர்கள் பதிவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்
செவிலியர்கள் (Staff Nurse) - 81
ஒப்பந்த அடிப்படையில் 81 காலி பணியிடங்கள் நிரப்புபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ClCKqwj0FIXb2xxypTz_ZDh4kwcVvq25/viewஇந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
கல்வித்தகுதி
- செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (BSC Nursing)
- இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருகிணைந்த பாடத்திட்டம் ( Integrated curriculam register under tn nursing course)
நிபந்தனைகள்
செவிலியர்கள் பணியானது முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. மேலும், கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது விவரம்
மேற்கண்ட பணிக்கு வயது வரம்பானது 50க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://drive.google.com/file/d/1ClCKqwj0FIXb2xxypTz_ZDh4kwcVvq25/view
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tiruvarur.nic.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- DHS Thiruvarur Jobs 2023 இதில் இருக்கும் முழு விவரங்களை படிக்க வேண்டும்
- மேற்கூறிய இணையத்தில் இருந்து DHS Thiruvarur Recruitment 2023 notification என்றில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தில் இருக்கும் விவரங்களை குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி
செயற் செயலாளர்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம் மற்றும்
துணை இயக்குநர் சுகாதாரத்பணிகள் அலுவலகம்,
பழைய மருத்துவமனை வளாகம், நெட்டி வேலைக்கார தெரு,
திருவாரூர் - 610001.
passport size photo, பிறப்பு சான்றிதழ், 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளங்கலை பட்டயப் படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவைகளின் நகலை விண்ணப்படிவத்துடன் இணைத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://drive.google.com/file/d/1ClCKqwj0FIXb2xxypTz_ZDh4kwcVvq25/view