தமிழ்நாடு அரசின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் இல்லத்தில் உளவியலாளர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தனர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணிக்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.  


காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். 


பணி விவரம்:


ஆற்றுப்படுத்துனர் - உளவியலாளார்


பணி இடம்: 


காஞ்சிபுரம் மாவட்டம்


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்கப்படுகிறது. இங்கு இரண்டு உளவியலாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு மதிப்பூதியம் (Honorarium) அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Counseling psychology)


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:


iந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களை கொண்ட தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:



இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் மாதம்  ஐந்து தினங்களுக்கு, நாளொன்றுக்கு ரூ.1000/- ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை இருக்கும்.


விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்ப படிவத்துடன் தேவையான கல்விச்  சான்றிதழ்களின் நகல்கள் 20-04-2023 மாலை 5.30 மணிக்குள் அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.


எண்.317, கே.டி.எஸ். மணி தெரு,


மாமல்லன் நகர், (மாமல்லன் மேல்நிலைப் பள்ளி அருகில்.


காஞ்சிபுரம் – 631 502.


தொலைபேசி எண் 044-27234950


விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-04-2023




மேலும் வாசிக்க..


Thiruvin Kural Review: அப்பா சென்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்த ’திருவின் குரல்’... அருள்நிதியின் படம் எப்படி இருக்கு?


Rudhran Movie Review: அம்மா சென்டிமென்டா? ஆக்ஷன் தாண்டவமா? : ராகவா லாரன்ஸின் "ருத்ரன் " பட விமர்சனம் இதோ...!