IBPS PO Vacancy 2025: ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்கான புரொபேஷனரி அதிகாரி/ மேலாண்மை பயிற்சியாளர் (PO/MT) ஆட்சேர்ப்புக்கான பதிவு சாளரத்தைத் திறந்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in-ஐப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசித் தேதி ஜூலை 21 ஆகும்.

காலியிட விவரங்கள்

பங்கேற்கும் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 5,208 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கி வாரியான காலியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாங்க் ஆஃப் பரோடா - 1,000

பாங்க் ஆஃப் இந்தியா - 700

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 1,000

கனரா வங்கி - 1,000

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 500

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 450

பஞ்சாப் நேஷனல் வங்கி - 200

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி - 358

அதே நேரத்தில் இந்தியன் வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இன்னும் தங்கள் காலியிட விவரங்களை வெளியிடவில்லை.

என்ன தகுதி?

வயது வரம்பு: ஜூலை 1, 2025 அன்று 20 வயது முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கலாம். அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம்.

விண்ணப்பக் கட்டணம்

எஸ்சி / எஸ்டி/ மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள்: ரூ.175

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ரூ.850

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://ibpsonline.ibps.in/ibpsjun25/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்கலாம்.

IBPS PO ஆட்சேர்ப்புக்கான முக்கிய தேதிகள்

விண்ணப்பப் பதிவு & கட்டணம் செலுத்த அவகாசம்: ஜூலை 1 முதல் 21ஆம் தேதி வரை

தேர்வுக்கு முந்தைய பயிற்சி (Pre- Examination Training): ஆகஸ்ட் 2025

முதல்நிலைத் தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு: ஆகஸ்ட் 2025

முதல்நிலைத் தேர்வு: ஆகஸ்ட் 2025

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு: செப்டம்பர் 2025

முதன்மை தேர்வு: செப்டம்பர்/அக்டோபர் 2025

முதன்மைத் தேர்வு: அக்டோபர் 2025

முதன்மைத் தேர்வு முடிவுகள்: நவம்பர் 2025

ஆளுமைத் தேர்வு (Personality Test): நவம்பர்/ டிசம்பர் 2025

நேர்காணல் சுற்றுகள்: டிசம்பர் 2025/ஜனவரி 2026

தற்காலிக ஒதுக்கீடு: ஜனவரி/ பிப்ரவரி 2026

இவ்வாறு ஐபிபிஎஸ் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XV.pdf