வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது உங்கள் கனவா. அதை நினைவாக்க ஒரு வாய்ப்பு... செம சூப்பர் வாய்ப்பு. அட ஆமாங்க. கனரா வங்கியில் கை நிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. தேர்வு கிடையாது. டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க.

Continues below advertisement

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெடில் டிரெய்னி பணிக்கு ரூ. 22,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. பட்டம் பெற்றவர்கள் (50% மதிப்பெண்) விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. வரும் 17க்குள் விண்ணப்பிக்கவும்.

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆனது டிரெய்னி (Administration/ office Work) பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு சார்ந்த வங்கிப் பணி என்பதால், அரசுப் பணி தேடுவோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள், அக்டோபர் 17, 2025-க்குள் விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Continues below advertisement

இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000/- ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், எந்தப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும். விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் இல்லை. மேலும், இது ஒரு சிறப்பு வாய்ப்பாகும். ஏனெனில், இப்பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, நேர்காணல் திறமை உடையவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை முறையாகப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, தேவையான அனைத்து ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் இணைத்து, applications@canmoney.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் கடந்த 11.10.2025 முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2025. எனவே காலதாமதம் செய்யாமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்புறம் ஏன் வெயிட்டிங். உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்புங்க.