Job: இளைஞர்களே தவறவிடாதீர்... நாளை வேலைவாய்ப்பு முகாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், நவயுகா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்.

புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், நவயுகா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்து, வேலை வாய்ப்பு முகாமினை நாளை 1 ம் தேதி காலை 9:00 முதல் 1:00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள புதுச்சேரி நடேசன் நகர், 3-வது குறுக்கு தெரு, எண்-5, முதல் தளத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கான தேசிய வாழ் வாதார சேவை மையம் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் ஐந்து நிறுவனங்கள் பங்கு கொண்டு பணியாட்களை தேர்வு செய்ய உள்ளன.
ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை அறிவியல், இன்ஜினியரிங், மேல்நிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். 18 முதல் 35 வயது நிரம்பியவர்கள் முகாமில் பங்குபெறலாம்.
முகாமில் தங்களது சுய விபரம் பற்றிய தற்குறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் அவசியம் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0413-2200115 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.