TNSAMB அறிவிப்பு: தமிழக அரசு வேலை; 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!  

தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். இந்தத் தகுதி இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க! அப்ப எங்களுக்கு இல்லையா என வேளாண் பட்டதாரிகள் கேட்கலாம். கல்வித் தகுதி வாரியாக வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது தமிழக அரசின் மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம்.

Continues below advertisement

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் (TNSAMB) மாநில அரசின் நிறைவேற்று ஆணையால் நிர்வகிக்கப்பட்டது. வேளாண் உற்பத்தி சந்தைகளின் வளர்ச்சியை மாநில அளவிலான திட்டமிடல் செய்வதற்கு. சந்தை வாரியம் நிதி மற்றும் சந்தை மேம்பாட்டு நிதி நிர்வகிக்க. குறிப்பாக, எந்தவொரு சந்தைக் குழுவிற்கும் சந்தை குழுக்களின் திசையை வழங்குவது, குறிப்பாக அதன் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக. சந்தைக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் கட்டுமானத் திட்டங்களின் மதிப்பீட்டில் சந்தைக் குழுக்களை மேற்பார்வையிடவும் வழிகாட்டவும் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.

இந்த வாரியத்தின் சிறப்பு முருங்கை ஏற்றுமதி வசதி மையத்தில், அலுவலக உதவியாளர், தரவு உள்ளீடு இயக்குனர், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எனப் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2022க்குள் விண்ணப்பிக்க அறிவுறத்தப்படுகிறார்கள்.

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (Technical Coordinator)

காலியிடங்களின் எத்தனை? 2

கல்வித் தகுதி என்ன? : B.Sc Agri with MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 5 – 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

தரவு உள்ளீடு இயக்குனர் (Data Entry Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : B.Sc Computer Science or BCA. மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.


அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Chief Executive Officer, Tamilnadu State Agricultural Marketing Board, CIPET road, Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai – 32

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2022

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு வேலையைப் பெற நேர்மையாக, நியாயமாக முயற்சி செய்யலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola