பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமை தகவல் அதிகாரி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி, துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (இ-சேனல்கள்), துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (கோர் பேங்கிங்) ஆகிய பதவிகளுக்கான 'ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.


 பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் மார்ச் 4, ல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://bank.sbi/web/careers என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.


 இணையதள முகவரி-https://sbi.co.in/


தேர்வு முறை:


தேர்வு பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்., "குறைந்தபட்ச தகுதி மற்றும் அனுபவத்தை பூர்த்தி செய்தாலே போதும், நேர்காணலுக்கு அழைக்கப்படுவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. வங்கியால் அமைக்கப்பட்ட ஷார்ட்லிஸ்டிங் கமிட்டி, ஷார்ட்லிஸ்டிங் விதிமுறைகள் நேர்காணல் குறித்து முடிவு செய்யும். அதன்பிறகு, வங்கியால் தீர்மானிக்கப்பட்ட போதுமான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை அழைப்பதற்கான வங்கியின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக எந்த கடிதப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படாது” என்று வங்கி குறிப்பிட்டுள்ளது.


நேர்காணல்:


நேர்காணலுக்கு  தகுதிப் பெற 100 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வில் எடுக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் தகுதி மதிப்பெண்கள் வங்கியால் தீர்மானிக்கப்படும். இது தொடர்பாக எந்த கடிதப் பரிமாற்றமும் நடத்தப்படாது தகுதிப் பட்டியல்: நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கட்-ஆஃப் மதிப்பெண்களை (கட்-ஆஃப் புள்ளியில் பொதுவான மதிப்பெண்கள்) பெற்றால், அத்தகைய விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலில் அவர்களின் வயது அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுவார்கள் என்று வங்கி தெரிவித்துள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது?


 


 வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sbi.co.in/web/careers


 க்குச் செல்லவும்


 'கேரியர்ஸ்' ஆப்சனை கிளிக் செய்யவும்.


'ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள்' இணைப்பைக் கிளிக் செய்யவும்.


உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.


'ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளின் வயது வரம்பு:


தலைமை தகவல் அதிகாரி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவிகளுக்கு, 2022 ஜனவரி 1ஆம் தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 55 ஆக இருக்க வேண்டும்.


துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (இ-சேனல்கள்), துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி  பதவிகளுக்கு, ஜனவரி 1, 2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக இருக்க வேண்டும்.