மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கும்பகோணத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை ( 10.07.2023) நடைபெற உள்ளது.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநிலம் முழுவதும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.


கும்பகோணம்


இத்திட்டத்தின் தொடர்ச்சியாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 07.10..2023 (சனிக்கிழமை) அன்று கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது.


முன்னணி நிறுவனங்கள் 


இவ்வேலைவாய்ப்பு முகாமில்  பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.


யாரெல்லாம் பங்கேற்கலாம்?


இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.


இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.


வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 


வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் - 07.10. 2023 காலை 8 மணி முதல் நண்பகல் 3 மணி வரை 


****


நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் 


கல்வித் தகுதி


இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.


MS Office தெரிந்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் இருப்பது சிறந்தது.


ஊதிய விவரம்


இதற்கு மாத ஊதியமாக ரூ.12,000 வழங்கப்படும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 45-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 


மாவட்ட ஆட்சியரக வளாகம் 
மாவட்ட ஆட்சியரக வளாகம்
முதல் நுழைவாயில்
நாகப்பட்டினம் - 611 003


தொடர்புக்கு - 04365 253036


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 02.10.2023


இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2023/09/2023092080.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.