அவசர உதவிக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ராணிப்பேட்டையில் நாளை (30.09.2023) நடைபெறுகிறது.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை EMRI Green Health Services நிறுவனம் நிா்வகித்து வருகிறது. இந்நிறுவனம், ஆம்புலன்ஸ் ஓட்டுனா்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி வருகிறது.
அதன்படி, 108 சேவை வேலைவாய்ப்பு முகாம் நாளை ராணிப்பேட்டையில் உள்ள வாலாஜா பகுதியில் நடைபெறுகிறது.
பணி விவரம்:
ஓட்டுநனர்
மருத்துவ உதவியாளர்
கல்வித் தகுதி
ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் DGNM, ANM, DMLT, (12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்.)
வயது வரம்பு:
ஓட்டுநர் - 24 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளர் - 19 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
ஓட்டுநர் - ரூ.15,235/-
மருத்துவ உதவியாளர் - ரூ.15,435/-
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் - 30.09.2023 / சனிக்கிழமை
நேரம் - காலை 10 மணி முதல் 2 மணி வரை
இடம் - அரசு மருத்துவமனை வளாகம் வாலாஜா.
தொடர்புக்கு
EMRI GREEEN HEALTH SERVICES,
DMS Campus,
Theynampet,
Anna Salai,
Chennai - 600 018
044- 2888 8060
www.emri.in -என்ற இணையதள முகவரியில் கூடுதல் விவரங்களை காணலாம்.
****
வேலூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
உதவியாளர்
கணினி இயக்குபவர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DCA, PGDCA, சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கணினி இயக்கத்தில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.11,916 வழங்கப்படும். இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://Vellore.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணா சாலை (சுற்றுலா மாளிகை எதிரில்)
வேலூர் - 632 011
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.10.2023