செங்கல்பட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (31.12.2022) நடைபெறுகிறது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற இருக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பினை அம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிக்காட்டுதல் மையம் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்துகிறது. 



எங்கே நடைபெறுகிறது?


இந்த வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 


எப்போது நடக்கிறது?


நாளை (சனிக்கிழமை, 31.12.2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.


யாரெல்லாம் பங்கேற்கலாம்?


இதில், 8, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், செவிலியா்கள்  உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்க உள்ளனா். தகுதி வாய்ந்தவர்கள் பங்கேற்கலாம்.


கவனத்திற்கு..


முகாமுக்கு வருவோா் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா். தேவையான கல்வி சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ் மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்றை எடுத்தச் செல்ல மறந்துடாதீங்க.


செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முகவரி கூகுள் லிங்க் - https://goo.gl/maps/BMeTGbAYq6cM57ns9


முகவரி: 


செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி


காஞ்சிபுரம் நெடுஞ்சாலை ’


செங்கல்பட்டு, தமிழ்நாடு - 603002




மேலும் வாசிக்க..


TNPSC Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 4 உள்ளிட்ட 15 வகைத் தேர்வுகள், முடிவுகள் எப்போது?- முழு அட்டவணை இதோ..!


Job Alert: தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ..!