காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள இரவுக்காவலர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்: 


இரவுக் காவலர்


பணிக்கான தகுதிகள் :


பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவர்), (General Turn (Non Priority)) இன சுழற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


01.07.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு OC-32 BC&BCM&MBC/DNC-34 SC&SC(A) &ST-37 ஆகும்.


எப்படி விண்ணப்பிப்பது?


கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச் சான்றிழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். 


இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மா. ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்: 


 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கையால் எழுதப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச் சான்றிழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் 28.12.2022 முதல் 13.01.2023 வரை மாலை 5.45 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ/பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.02.2023


இந்தப் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். 


முகவரி:


பொது தகவல் அலுவலா் – துணை இயக்குநா்,


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம் - 631501


தொடர்புக்கு:


இ-மெயில் : www[dot]tnskills[dot]tn[dot]gov[dot]in .


தொலைபேசி எண்.044-22501007




மேலும் வாசிக்க.


TN TRB Annual Planner 2023: பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் - முழு அட்டவணையை வெளியிட்ட டி.ஆர்.பி.; விவரம்


Jobs Alert : வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு.. அடுத்த வாரங்களில் விண்ணப்பிக்க வேண்டிய பணிகள்! முழு விவரம்!