மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியா உள்ள 5 ஈப்பு ஒட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி குறித்த கூடுதல் விவரம்


மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியா உள்ள 5 ஈப்பு ஒட்டுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


காலி பணியிடங்கள்


ஈப்பு ஓட்டுநர் - 05


கல்வித்தகுதி


ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988)-ன்படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்று நடப்பில் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


வருமானம்


ஈப்பு ஓட்டுநருக்கு வருமானமானது ரூ.19,500 முதல் 62,000 வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது


ஈப்பு ஓட்டுநர் பணிக்கு வயது வரம்பானது பொதுப்பிரிவினருக்கு  32க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகியோருக்கு 34க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 42க்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம். file:///C:/Users/Admin/Downloads/2022120977%20(2).pdf


விண்ணப்பிக்கும் முறை


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.01.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். மாறாக பிறகு காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),


மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப்பிரிவு),


ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம், மயிலாடுதுறை 609001


விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி


ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 10-ஆம் தேதி கடைசி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும். ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் https://mayiladuthurai.nic.in/என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


Job Alert : வங்கியில் தொழில்பழகுநர் பயிற்சி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி எப்போது?