பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் (Bank of Maharashtra) தொழிழ்பழகுநர் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 314 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.


தொழில்பழகுநர் பயிற்சி விவரம்:


 




பணி இடம்:


ஆந்திர பிரதேசம், சண்டிகர், சட்டீஸ்கர், புது டெல்லி, கோவா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், இராஜஸ்தான், தமிழ்நாடு, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மகாராஷ்டிரா வங்கி கிளைகளில் பயிற்சி வழங்கப்படும். 


கல்வி மற்றும் பிற தகுதிகள்:


இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


உள்ளூர் மொழியில் எழுத, படிக்க, பேச நன்றாக தெரிந்திருக்க வேண்டும். 


சம்பந்தப்பட்ட துறைகளில் பணி அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். 


வயது வரம்பு: 


இதற்கு விண்ணப்பிக்க 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?


https://www.bankofbaroda.in/ - என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-12-2022.


மேலும் விரிவான விண்ணப்ப நடைமுறைகளை https://bankofmaharashtra.in/current-openings - என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.




இதையும் படிங்க..


Group 1 Timetable: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் இங்கே..