அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரங்களை காணலாம்.
பணி விவரம்
இடைநிலை ஆசிரியர்கள்
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணபிக்க வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள் இல்லையெனில் கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET) விண்ணப்பிக்கலாம். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதோடு, பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதிய விவரம்:
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் - ரூ.12,000
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் - ரூ.12,000
தேர்வு செய்யப்படும் முறை
இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க தகவல் அனுப்பப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்
அரியலூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி -29.09.2023
அறிவிப்பு தொடர்பான முழு விவரத்திற்கு https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/09/2023092656.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
*****
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிட பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
பணி விவரம்
ஆசிரியர் (தமிழ், கணிதம், அறிவியல்
பணியிடம்: வேலூர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க தமிழ், கணிதம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் இருந்தால் சிறப்பு. அதோடு, பி.எட். தேர்ச்சி பெற்று டெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
இதற்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.22,000 வழங்கப்படும். சுழற்சி முறையில் விடுதியில் தங்கி பணியாற்ற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க தகவல் அனுப்பப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா
குறிச்சி கிராமம் அஞ்சல் பவானி தாலுக்கா,
அம்மாபேட்டை ஒன்றியம்
ஈரோடு - 638 314 (9543034767 / 9095128808 )
Email ID - ragavan.g@hihseed.org
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா
குன்னன்புரம் கிராமம், கெட்டவாடி அஞ்சல்
தளவாடி தாலுக்கா,
தாளவாடி
ஈரோடி - 638461
9543034767 / 9025203343