நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு...
நபார்டு வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியில் 102 (பொது/சிஏ/ நிதி) காலியிடங்கள் உள்ளன. இதில் கல்வித் தகுதி உதவி மேலாளர் (பொது) பணிக்கு ஏதாவது ஒரு டிகிரியில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
உதவி மேலாளர் (சிஏ) பணிக்கு ஏதாவது ஒரு டிகிரியுடன் ஐசிஏஐ வில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (நிதி) பணிக்கு பிபிஏ (பைனான்ஸ்/ நிதி), பிஎம்எஸ் உள்ளிட்ட படிப்புகளை படித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1994 க்கு முன்பாகவோ 01.07.2003க்கு பிறகோ பிறந்திருக்க கூடாது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை:
முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, சைக்கோமெட்ரிக் டெஸ்ட் ஆகியவை விண்ணப் பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வுகள் நடக்கும்.
விண்ணப்ப கட்டணம்:
ஆன்லைன் மூலம் ரூ.850. எஸ்சி/எஸ்டி. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2024 ஆகும்.
மத்திய அரசில் ஸ்டெனோகிராபர் வேலை வாய்ப்பு..
மத்திய அரசின் கிரேட் சி மற்றும் டி பிரிவுகளில் ஸ்டெனோகிராபர் பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள்: 2 ஆயிரத்து மேற்பட்ட பணியிடங்கள் உள்ளது .
கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.
வயது வரம்பு: கிரேட் சி பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
கிரேட் இ டி பணிக்கு அதிகபட்ச வயது 27 ஆகும். அதாவது 1997க்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யும் முறை: கணினி வழி எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திறன் தேர்வில் விண்ணப்பதாரர்களுக்கு டைப்பிங் திறன் சோதிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: ssc.gov.in
விண்ணப்ப கட்டணம்: ரூ.100,
பெண்கள். எஸ். சி/எஸ்.டி. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2024 ஆகும்.
டிஎன்பிஎஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு..
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதவி இன்ஜினியர், விவசாய அதிகாரி, உதவி இயக்குனர் உதவி புவியியலாளர் வேதியியலாளர், மருந்து ஆய்வாளர், ஜூனியர் ஆர்க்கிடெக்ட் ஜூனியர் மேனேஜர், கியூரேட்டர், ஆராய்ச்சி உதவியாளர், புள்ளி யியல் ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், நூலக உதவியாளர், நூலகர், தொழில்நுட்ப நிர்வாகி, செயல் அன வையர், செயல் நிலத்தியலாளர், செயலக அலுவலர், போர்மேன், நுண்கதிர் ஆய்வாளர், சிசிஆர் இயக்குபவர், உதவி காப்பாட்சியர், உதவி சுற்றுலா அலுவலர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், பண்டகக் காப்பாளர், உதவி மேலாளர் (சேமிப்பு கிடங்கு) மற்றும் இள நிலை உதவியாளர் என 654 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பணிக்கு ஏற்ற பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: போர்மேன் பணிக்கு 16 வயதும், மற்ற பணிகளுக்கு 21 வயதும் முடிந்திருக்க வேண்டும்.
Foreman பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/பிசி/ பிசிஎம்/எம்பிசி/டிசி பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு கிடையாது.மேலும் மற்றவர்கள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை: தாள் 1 மற்றும் தாள் 2 என்று தேர்வு நடத்தப்படும். பிறகு ஆன்லைனிலும் நேரடியாகவும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு குதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சில குறிப்பிட்ட பதவிகளுக்கு தேவைப்பட்டால் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த பதவிகளுக்கு நேர்காணல் கிடையாது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnpsc.gov.in
தேர்வு கட்டணம்: ரூ.100 ஆகும்
கடைசி தேதி: 24.08.2024 ஆகும்.