கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ அலுவலர்கள், பல் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவ அலுவலர்கள், உதவியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


காலி இடங்கள்


ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ அலுவலர் ( Dental Surgeon ) - 08 இடங்கள்


அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் மருத்துவ உதவியாளர் ( Dental Assistant ) - 07 இடங்கள்


கல்வித் தகுதி



  • பல் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதியானது, அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிடிஎஸ் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று Tamilnadu Dental Council Registration செய்தும் இருக்க வேண்டும்.

  • பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதியானது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிதொடர்பாக குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் இருத்தல் வேண்டும். 


ஊதிய விவரம்:



  • பல் மருத்துவ அலுவலர் பணிக்கு தொகுப்பூதியம் (Consolidated Pay) அடிப்படையில் மாதம் 34,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு  தொகுப்பூதியம் (Consolidated Pay) அடிப்படையில் மாதம் 13,800 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது வரம்பு 35-க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


இப்பணிக்குத் தகுதியான விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு பந்தய சாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் தேர்வு நடைபெறும் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி


மேற்கண்ட பணிகளுக்கு டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை


நேரிலோ தபால் மூலமோ அனுப்பப்படும் விண்ணப்பங்களின் hard Copy கட்டாயமாக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும்.  பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் (Under Taking ) அளிக்க வேண்டும். மேலும் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ள அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/11/2022112135.pdf இந்த லிங்க மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.


முகவரி


உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல்வாழ்வுசங்கம் (District Health Society )
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயமுத்தூர் -18.


முமு விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம். https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/11/2022112242.pdf