திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu) காலியாக உள்ள பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுககான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'Non-Teaching Staff' பிரிவில் மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
- Hindi Officer -01
- Section Officer- 01
- Private Secretary -03
- Senior Technical Teaching and Non-Teaching (Laboratory)- 01
- ஜூனியர் பொறியாளர் (Electrical)- 01
- உதவியாளர்- 01
- Personal Assistant- 01
- Security Inspector- 01
- Statistical Assistant- 01
- Lower Division Clerk- 05
- Multi-Tasking Staff - 02
- நூலக உதவியாளர்- 01
- ஆய்வக உதவியாளார்- 02
கல்வித் தகுதி:
Hindi Officer- இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Section Officer - ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகால பணி அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Private Secretary - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகால பணி அனுபவம் அவசியம். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். அதற்கான படிப்பில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வேண்டும்.
வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Senior Technical Assistant (Laboratory) பணிக்கு M.Sc./ B.Tech/ B.E (Physical/ Chemical/ Biological or Life Sciences/ Materials Sciences/ Earth science/ Computer Science) ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Junior Engineer (Electrical) - சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Assistant - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் அவசியம். தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு- 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Personal Assistant - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபமும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு- 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Security Inspector - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு- 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Statistical Assistant - பணிக்கு Statistics அல்லது கணிதம், வணிகவியல், பொருளியல் ஆகிய துறையில் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு- 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Lower Division Clerk - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Multi-Tasking Staff - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Library Attendant - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Laboratory Attendant - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கான வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான கல்வி சான்றிதழ்களை அப்லோடு செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
முகவரி :
“The Joint Registrar, Recruitment cell,
Central University of Tamil Nadu,
Neelakudi,
Thiruvarur – 610 005, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.12.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/wp-content/uploads/2022/11/NT_ADVT-NOV-2022_18112022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.