ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள நர்சிங் அதிகாரி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர்,  தொழில்நுட்ப உதவியாளர், மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் என பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏப்ரல் 17ல் ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்னத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





 ஜிப்மர் நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:


 மொத்தப் பணியிடங்கள் – 143


 கல்வித்தகுதி:


 நர்சிங் அதிகாரி - பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.


மருத்துவ ஆய்வக உதவியாளர் - மருத்துவ ஆய்வக அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளநிலை பொறியாளர் - சிவில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு அனுபவம் அல்லது டிப்ளமோ படிப்பு 3 ஆண்டு அனுபவம். கட்டிட டிசைன் மற்றும் கட்டுமானத் திட்டங்களில் பணி செய்திருக்க வேண்டும். இதேபோன்று எலெக்ட்ரிக்கல் பிரிவில் படப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் எலெக்ட்ரிக்கல் கட்டமைப்பு பிரிவில் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்டிடிசி தொழில்நுட்ப உதவியாளர் - இசிஇ பிரிவில் பொறியியல் படிப்பு


டெண்டல் மெக்கானிக் - அறிவியல் பாடத்துடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


இளநிலை அலுவலக உதவியாளர் - 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம் அல்லது ஹிந்தி டைப்பிங் தெரிந்திருந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் - மயக்கவியல் பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்டெனோகிராஃபர் கிரேட் 2 - 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் திறன் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.jipmer.edu.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


 தேர்வு செய்யும் முறை:


 விண்ணப்பதாரர்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இப்பணியிடங்களுக்கான முக்கியத் தேதிகள்:


 நர்சிங் அதிகாரி, இளநிலைப் பொறியாளர், டெண்டல் மெக்கானிக் பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு – ஏப்ரல் 17, 2022 காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.


 ஏப்ரல் 17, 2022 நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி:


 மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு


ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி:


இளநிலை அலுவலக உதவியாளர், மருத்துவ ஆய்வக உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம்:


நர்சிங் அதிகாரி - ரூ.44,900


மருத்துவ ஆய்வக உதவியாளர் - ரூ.35,400


இளநிலை பொறியாளர் - ரூ. 35,400


என்டிடிசி தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.35,400


டெண்டல் மெக்கானிக் - ரூ.25,500


இளநிலை அலுவலக உதவியாளர் - ரூ.19,900


மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் - ரூ.25,500


ஸ்டெனோகிராஃபர் கிரேட் 2 - ரூ.25,500


எனவே இப்பணியிடங்களுக்கு இன்றைக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.மற்றும் முன்னதாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்கள் அனைவரும் ஆன்லைன் தேர்விற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.