இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 526 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவியாளர், இளநிலை தனிப்பட்ட உதவியாளர், எழுத்தர், ஸ்டெனொகிராபர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


பணி விவரம்:


உதவியாளர்


இளநிலை உதவியாளர்


எழுத்தர்


ஸ்டேனொகிராபர்


மொத்த பணியிடங்கள் - 526


கல்வித் தகுதி: 


உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 


ஸ்டெனோகிராபர் பணிக்கு டைப்பிங் தெரிந்த்ரிக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 
 
இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25, 500 ஆக வழங்கப்படும். பேமேட்ரிக்ஸ் லெவல் 4 இன் படி ஊதியமும் அதனோடு வழங்கப்படும் அனைத்து கூடுதல் சேவைகளும் அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது? 


இதற்கு https://www.isro.gov.in/- என்ற இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். மேலும், விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்: 


ரூ.100. விண்ணப்பக் கட்டணம் ஆகும். இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியின் டிமாண்ட் டிராஃப் எடுக்கலாம்.
 
 வயதுவரம்பு: 


9.1.2023 தேதியின்படி கணக்கிடப்படும். 28-க்குள் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:


 எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஸ்டெனோகிராபர் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்



விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.1.2023


https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/Advt.Asst.JPA.2022.Website.Bilingual.pdf


- என்ற இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெரிந்துகொள்ளலாம்.