இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation, ISRO)பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தொழில்நுட்ப வல்லுநர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்



  • Technical Assistant

  • Technician ‘B’, 

  • Draughtsman ‘B’,

  •  Heavy Vehicle Driver ‘A’,

  • Light Vehicle Driver ‘A’

  • Fireman -’A’


மொத்த பணியிடங்கள் - 63


கல்வி மற்றும் பிற தகுதிகள்:



  • டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரானிகஸ், எலக்ட்ரிக்கல், சிவில், கம்யூட்டர் சயின்ஸ் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்

  • டெக்னிசியன் ‘பி’ பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • ஃபிட்டர், எல்க்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க அந்தந்த துறைகளில் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • ஓட்டுநர் பணியிடத்திற்கு பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

  • குறைந்தது மூன்றாண்டுகள் ஓட்டுநராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். 

  • கனரக வாகனம் ஓட்டுவதில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • ஃபையர்மேன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்



  •  Technical Assistant - Level 7 in the Pay Matrix ரூ..44900 - 142400/-

  •  Technician ‘B’ - Level 3 in the Pay Matrix ரூ.21700 - 69100/-

  •  Draughtsman ‘B’ - Level 3 in the Pay Matrix ரூ.21700 - 69100/-

  •  Heavy Vehicle Driver ‘A’ - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-

  •  Light Vehicle Driver ‘A’ - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-

  •  Fireman -’A’ - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-


தேர்வு செய்யப்படும் முறை :


இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://career.iprc.gov.in/recruit/advt.jsp- என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு ரூ.750 மற்ற்ம் டெக்னிக்கல் பி, ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.


பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி நாள்- 24.04.2023


தேர்வு தேதி, உள்ளிட்ட முக்கியமான கூடுதல் தகவலுக்கு இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.iprc.gov.in/iprc/files/careers/Detailed%20Notification%20English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.




மேலும் வாசிக்க..


LSG vs SRH: வெற்றிக்காக போராடும் லக்னோ - ஹைதராபாத் அணிகள்.. இன்றைய ஆட்டத்தில் வெற்றி யாருக்கு?


PM Modi Visit: தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி..! எத்தனை மணிக்கு எங்கெல்லாம் செல்கிறார்..? முழு அட்டவணை