இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank Limited (IPPB))-யில் உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Executive - 47
தமிழ்நாடு, பிஹார், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசகம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் தேர்ந்தெடுப்பவர்கள் பணியமர்த்தப்படுவர்.
கல்வித் தகுதி:
- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- எம்.பி.ஏ. Sales / Marketing துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
- பணி அனுபவம் இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி காலம்:
இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி; பணித்திறன் அடிப்படையில் மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் முறை:
இளங்கலை படிப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு தேர்வு செய்யப்படுவர்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.30,000/-வழங்கப்படும். வரிப் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு பொதுப்பிரிவினர் ரூ.750/-யும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் / PWD ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.04.2023 இரவு 11.59 மணி வரை
மேலும் வாசிக்க..
CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவர
IIT Recruitment: எம்.டெக். முடித்தவரா? சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை - விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்!