India Post Recruitment 2023: 10,12-வது தேர்ச்சி போதும்; அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள்; விண்ணபிப்பது எப்படி?

India Post Recruitment 2023: இந்திய அஞ்சல் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

Continues below advertisement

இந்திய அஞ்சலக (India Post) துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய தொடர்பியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 1,899 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

Continues below advertisement

இந்தப் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் ஆந்திர பிரதேசம் ,அசாம், பீகார், டெல்லி, குஜராத், ஹரியான, ஓடிசா, பஞ்சாப், இராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்காளம், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட் பல்வேறு மாநிலங்களில் இந்த அறிவிப்பின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விளையாட்டுத் துறையில் உள்ள இடஒதுக்கீடு முறையிலும் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். 


பணி விவரம்

போஸ்டல் உதவியாளர் (Postal Assistant) - 598

உதவியாளர் - (Sorting Assistant) 143 

தபால்காரர் - 585 

Mail Guard - 3

பல்நோக்கு உதவியாளர் (Multi - Tasking Assitant) - 570  

மொத்த பணியிடங்கள் - 1,899

தமிழ்நாடு வட்டம்

போஸ்டல் உதவியாளர் (Postal Assistant) - 110

உதவியாளர் - (Sorting Assistant) - 19

தபால்காரர் - 108

பல்நோக்கு உதவியாளர் - 124

கல்வி மற்றும் பிற தகுதிகள்

போஸ்டல் உதவியாளர், Sorting Assitnat உதவியாளருக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தபால்காரர், மெயில்கார்ட் ஆகிய பணிகளுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் உள்ளூர் மொழி பேச, தெரிந்திருக்க வேண்டும். 

தமிழ்நாடு வட்டாரத்தில் மட்டும் 361 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். மகளிர், திருநங்கை/ திருநம்பியர், பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், EWS,PwBD ஆகியோருக்கு விண்ணப்பிக கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்

(a) Postal Assistant Level 4 (ரூ.25,500 - ரூ.81,100)
(b) Sorting Assistant Level 4 ( ரூ.25,500 - ரூ.81,100)
(c) Postman Level 3 (ரூ. 21,700 - ரூ.69,100)
(d) Mail Guard Level 3 (ரூ.21,700 - ரூ.69,100)
(e) Multi Tasking Staff Level 1 (ரூ.18,000 - ரூ.56,900

விண்ணப்பிப்பது எப்படி?

https://dopsportsrecruitment.cept.gov.in- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.12.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_08112023_Sportsrectt_English.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


 

Continues below advertisement