இந்திய உளவுத் துறையில் ( INTELLIGENCE BUREAU) காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


இந்தப் பணியிடங்களுக்குஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


பணி விவரம்:


பாதுகாப்பு உதவியாளர் / மோட்டார் வாகன நிர்வாகி - 362


பல்நோக்கு உதவியாளர் -315


மொத்த பணியிடங்கள்: 677


கல்வித் தகுதி


இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வாகனத்தில் ஏற்படுத்தும் சிறிய  த்தியாவசிய பழுதுகளை சரிசெய்யும் திறன் தெரிந்தவராக இருக்க வேண்டும்.


இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம்  பெற்றிருக்க வேண்டும்.


மேலும், ஓட்டுநர் உரிமம் பெற்ற நாளில் இருந்து, குறைந்தது  12 மாதங்கள் இலகு ரக வாகன ஓட்டுநராக அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பல்நோக்கு உதவியாளர் குறைந்தது 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு


 பாதுகாப்பு உதவியாளர்/ மோட்டார் வாகன நிர்வாகி  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 13.11.2023 அன்று 27-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


 பல்நோக்குப் பணியாளர் பதவிக்கு 13.11.2023-ன் அடிப்படையில் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.


ஊதிய விவரம்:


லெவல் 3 - ரூ.21.700 - ரூ.69,100/-


லெவல், 1- ரூ.18,000 - ரூ.59.900/-


தேர்வு முறை: 


முதல்நிலை தேர்வு (Tier -I), இரண்டாம் நிலை தேர்வு (Tier -II) ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். 


கணினி வழியாக நடத்தப்படும் முதல்நிலை தேர்வு அனைவரும் எழுத வேண்டும்.


மோட்டார் வாகன நிர்வாகி பதிவுக்கு விண்ணப்பித்தவர்கள் ஓட்டுநர் தகுதித் திறன் (Motor Mechanism & Driving test cum Interview)  இரண்டாம் நிலை தேர்வில் பங்கேற்க வேண்டும்.


பல்நோக்குப் பணியாளர் பதவிக்கு, இரண்டாம் நிலை தேர்வு  ‘ஆங்கில மொழி விரிவுரை’ (Descriptive Test on English Language and Comprehension)  தேர்வாக நடத்தப்படும்.


விண்ணப்பக் கட்டணம்


 தேர்வு கட்டணம் - ரூ. 50/-


 சேவை கட்டணம் - ரூ. 450/-


பட்டியலின /பழங்குடியின பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்




விண்ணப்பிப்பது எப்படி?


 உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான  www.mha.gov.in-ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூடுதல் விவரங்களை https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1115467299874462947871.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.11.2023