அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி குறித்த முழு விவரம்



  • Accountant/Office Superintendent cum Accountant

  • ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் - இந்தி மொழி

  • உதவியாளர்

  • Data Entry Operator – Grade III

  • Lower Division Clerk


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • கணக்காளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடிட்டிங் உள்ளிட்ட பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

  • ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • இந்தியின் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • இந்தியில் இருந்து ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

  • பொது மேலாண்மை / அக்கவுண்ட்ஸ் பணியில் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  •  Data Entry Operator – Grade III பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்யூட்டர் அப்ளிகேசனில் டிப்ளமோ படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

  • Lower Division Clerk பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:



  •  Accountant/Office Superintendent cum Accountant - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

  •  Junior Hindi Translator - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

  •  Assistant - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

  • Data Entry Operator – Grade III - Pay Matrix Level 2 ரூ,19,900- 63,200

  • Lower Division Clerk - Pay Matrix Level 2 ரூ.19,900- 63,200


தேர்வு செய்யப்படுவது எப்படி?


எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


தேர்வு மையம்:


தமிழ்நாட்டில் சென்னையில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ https://www.aicte-india.org/-இணையதளத்தை காணவும். 


விண்ணப்ப கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க ரூ.1000 விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள் ஆகியோருக்கு ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். முன்னாள் இராணுவ துறையினருக்கு விண்ணப்பம் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


https://recruitment.nta.nic.in/AICTERecruitment/File/ViewFile?FileId=1&LangId=P - என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி -15.05.2023


ஆன்லைன் விண்ணப்பிக்க https://recruitment.nta.nic.in/AICTERecruitment/Page/Page?PageId=1&LangId= ---என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


https://examinationservices.nic.in/RecSys23/root/home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgPFR0UqSrt3KQtGobJonLkM5K9MVJ53XE3hLmsTsJOEO -- என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ளவும்.




மேலும் வாசிக்க..


Pakistan: ‘செத்தும் நிம்மதி இல்லை’ - இறந்த பெண்களின் உடலை தோண்டி பாலியல் வன்கொடுமை: மக்கள் அதிர்ச்சி


இதையும் படிங்க..


Salman Khan: ‘பெண்களின் உடல் மதிப்புமிக்கது; அது ஆடைகளால் மூடப்பட வேண்டும்’ - நடிகர் சல்மான்கான்