இந்தியக் கடற்படையில் எஸ்எஸ்சி அதிகாரி பணிக்கான 155 காலி இடங்களுக்கு மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1.77 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 

இந்தியக் கடற்படையில் Short Service Commission எனப்படும் எஸ்எஸ்சி அதிகாரிகளுக்கான 150 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பிப்ரவரி 25ஆம் தேதி முதல் முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விண்ணப்பித்து முடிக்க மார்ச் 12 கடைசித் தேதி ஆகும். 

இதில் நிர்வாகப் பிரிவில் 93 பணியிடங்களும் கல்விப் பிரிவில் 17 காலி இடங்களும் தொழில்நுட்பப் பிரிவில் 45 பணி இடங்களும் காலியாக உள்ளன. 

காலியிட விவரங்கள்

ஹைட்ரோகேடர் - 40கடற்படை ஆயுத ஆய்வாளர் பிரிவு (NAIC) - 6போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (ATC) - 6அப்சர்வர்- 8பைலட் - 15லாஜிஸ்டிக்ஸ்- 18கல்விப் பிரிவு- 17பொறியியல் பிரிவு (GS) - 45

இந்தப் பணிகளுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி

விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டதாரியாக இருக்க வேண்டும். தன்னுடைய இறுதி ஆண்டு படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கேற்ற சிஜிபிஏ மதிப்பெண்கள் இருக்க வேண்டும். 

பொறியியல் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற பட்டதாரிகளும் எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள்.

தேர்வு முறை

விண்ணப்பங்கள் தேர்வு எஸ்எஸ்பி தேர்வுமருத்துவ உடல்தகுதித் தேர்வுஇறுதிக்கட்டப் பட்டியல்

எப்படி விண்ணப்பிப்பது?

* விண்ணப்பிக்க விரும்புவோர் joinindiannavy.gov.in என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லுங்கள். 

* உங்களுக்கான கணக்கை (account) உருவாக்கி, அதில் உள்நுழையுங்கள். 

* விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கி, நிரப்பிக் கொள்ளுங்கள் 

* தேவையான ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். சமீபத்திய புகைப்படமும் அவசியம். 

கூடுதல் தகவல்களுக்கு: joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைக் காணவும்.

மேலும் வாசிக்க:

+2 முதல் டிகிரி படித்தவர்களுக்கு ஹைதராபாத் NIPER ல் வேலை..ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண