பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ்மென்ட்(Fraud Risk And Risk Management)  பிரிவில் காலியாக உள்ள 42 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


பாங்க் ஆப் பரோடா வங்கி ( Bank of Baroda)  என்பது இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாகும். தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது  பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ்மென்ட்(Fraud Risk And Risk Management) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு என்னென்னத் தகுதி தேவை? விண்ணப்பிக்கும் முறை? மற்றும்  தேர்வு செய்யும் முறை குறித்து குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





பாங்க் ஆப் பரோடா வங்கிப் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 42


கல்வித்தகுதி:


வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.


எம்பிஏ அல்லது ஏதாவதொரு ஒரு பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் பிஜிடிஎம், ஐசிடபிள்யுஏ, பிடெக், பிஇ, எம்டெக், எம்இ, பிஎஸ்சி அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக விண்ணப்பதாரர்கள், கல்லூரியில் நேரடியாக சென்று படித்திருப்பதோடு, ஓரளவு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும்க விண்ணப்பதாரர்கள் முதலில் https://www.bankofbaroda.in/ என்ற பேங்க் ஆப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.


இதனையடுத்து அப்பக்கத்தில் உள்ள கேரீர் ஆப்பர்சூனிட்டிஸ் (career opportunites) என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


இதில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ் மென்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் ஆப்சன் வரும்.


இதன் மூலம் நீங்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பக்கட்டணத்தையும் ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி – மார்ச் 15, 2022


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையின் தரம்பிரிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு  அழைக்கப்படுவார்கள்.


நேர்காணலுக்கு செல்லும் போது விண்ணப்பதாரரர்கள் இப்பணிக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.


மேலும் இப்பணிக்கான கூடுதல் விபரங்களை https://www.bankofbaroda.in/career என்ற வங்கி இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளவும்.