சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நாளை (12.02.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்

குரூப் ஏ

மூத்த பாதுகாப்பு அதிகாரி

உதவி பதிவாளர்

விளையாட்டு அதிகாரி 

குரூப் பி

ஜூனியர் கண்காணிப்பாளர்

உதவி பாதுகாப்பு அதிகாரி

உடற்கல்வி பயிற்சியாளர்

குரூப் சி 

ஜூனியர் உதவியாளர்

சமையலர்

ஓட்டுநர்

காவலர் 

மொத்த பணியிடங்கள் - 64

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

  • மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • காவலர் பணிக்கு 10-வது, 12-வது படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 
  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

குரூப் ஏ

மூத்த பாதுகாப்பு அதிகாரி - 50 வயது

உதவி பதிவாளர் - 45 வயது

விளையாட்டு அதிகாரி  - 45 வயது

குரூப் பி

ஜூனியர் கண்காணிப்பாளர் - 32 வயது

உதவி பாதுகாப்பு அதிகாரி - 32 வயது

உடற்கல்வி பயிற்சியாளர் - 32 வயது

குரூப் சி 

ஜூனியர் உதவியாளர் - 27 வயது

சமையலர் -27 வயது

ஓட்டுநர் - 27 வயது

காவலர் -27 வயது

ஊதிய விவரம்

குரூப் ஏ

  • மூத்த பாதுகாப்பு அதிகாரி - குரூப் - லெவல் -12
  • உதவி பதிவாளர் - லெவல் -10
  • விளையாட்டு அதிகாரி -லெவல் -10
  • குரூப் பி பணியிடத்திற்கு லெவல் 6 மாத ஊதியம் வழங்கப்படும்.
  • ஜூனியர் உதவியாளர், சமையலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு லெவல் -3-ன் படியும் காவலர் பணிக்கு லெவல் -1ன் படியும் ஊதியம் வழங்கப்படும்.

தெரிவு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், ட்ரேட் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

பட்டியலின / பழங்குடியின பிரிவினர், மகளிர், PWD உள்ளிட்டவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

https://recruit.iitm.ac.in/  - என்ற இணையதள முகவரியில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலம். 

விண்ணபிக்க கடைசி தேதி - 12.03.2024 மாலை 05.30 மணி வரை 

இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள- recruit@iitm.ac.in