TNAU Recruitment 2023: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை; வரும் 31-ஆம் தேதி நேர்காணல் - முழு விவரம்

TNAU Recruitment 2023: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பினை காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள 'Young Professtional' பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

Continues below advertisement

பணி விவரம்

  • Young Professional (JRF)
  • Junior Research Fellow
  • Senior Research Fellow

கல்வித் தகுதி

  • சீனியர் ஆய்வக உதவியாளர் பணிக்கு எம்.எஸ்.சி. வணிகவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Young Professional (JRF) பணிக்கு பி.எஸ்.சி. வேளாண்மை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • ஜூனியர் ஆய்வக உதவியாளர் பணிக்கு பி.டெக்., பி.இ. (Agricultural Engineering) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

  • Young Professional (JRF) - ரூ.25,000
  • Junior Research Fellow - ரூ.20,000
  • Senior Research Fellow - ரூ. 31,000 (நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு)
  • ரூ.25,000 (நெட் முடிக்காதவர்களுக்கு)

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு வரும் 31-ம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்காணல் நடைபெறும் நாள் - 31.08.2023

முகவரி

Tamil Nadu Agricultural University, 
Lawley Rd, 
P.N. Pudur, 
Tamil Nadu 641003

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புன் விவரத்தை காண https://tnau.ac.in/site/csw/job-opportunities/ - இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

******

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில்  உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இம்மாதம் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், 28 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்:

ECG Technicain

மொத்த பணியிடங்கள் - 95

கல்வித் தகுதி :

இதற்கு விண்ணப்பிக்க அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஓராண்டுகால Medical Laboratory Technology படிப்புகளில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக்கல்வி பயின்றிருக்க வேண்டும். 

அதோடு, Electro Cardiogram /  Treadmill Technician சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-1)

பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆரம்ப கால ஊதியமாக ரூ.13,000 வழங்கப்படும், இரண்டு ஆண்டுக்கும் 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

இரண்டு ஆண்டு பணிக்கு பிறகு ரூ.19,500 மாத ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு விவரம் :

இந்த பணியிடங்களுக்கு 01/07/2023  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/  - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/notification_ECG_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


 

Continues below advertisement