10-ம் வகுப்பு முடித்தாலே ராணுவத்தில் பணி புரியலாம்


 இந்திய ராணுவத்தில் 10-ம் வகுப்பு தகுதியான பணிகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணியிடங்கள்:


10ஆம் வகுப்பு தகுதியான என்னென்ன பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை காண்போம்:


1.முடி திருத்துபவர்- 12


2.சுகாதார அலுவலர்-58


3.காவலர்-43


மூன்று பதவிகளுக்கு மொத்த பணியிடங்கள் 113 அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும் பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கவோ குறைக்கவோ வாய்ப்பு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை:


 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமீபத்திய புகைப்படம், கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்,கல்விச் சான்றிதழ் மற்றும் இருப்பிட  சான்றிதழ் ஆகிய நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பத்திற்கான லிங்க்.


தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.150 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்.அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்


முடி திருத்துபவர்:


 10 ஆம் வகுப்புக்கு நிகரான படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் முடி திருத்தும் பணியில் திறன் பெற்றுள்ளதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


சுகாதார அலுவலர் பணி:


சுகாதார அலுவலர் பணிக்கு 10 ஆம் வகுப்புக்கு நிகரான படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் sanitary inspector பயிற்சி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.


காவலாள் பணி:


காவலாள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்புக்கு நிகரான படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


மேலும் விண்ணப்பிப்பதில் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10  ஆண்டுகளும்  வயதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தொடர்புடைய தலைப்புகள் :



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண