முடிதிருத்துபவர், காவலர் மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது, தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து கடைசி தேதிக்கு முன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.


 


வேலைவாய்ப்பு அறிவிப்புகள்:


வேலை 1: முடி திருத்துபவர், காவலர்


வேலை 2: சுகாதார ஆய்வாளர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர்)


 


காலியிடங்கள்:


முடி திருத்துபவர் - 12


காவலர் - 43


சுகாதார ஆய்வாளர் - 58


 


விண்ணப்பிக்க கடைசி தேதி


மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 45 நாட்கள் வரை இருக்கும். இது வெளியிடப்பட்டது மே 7 என்பதால், ஜூன் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



வேலைக்கான தகுதி


முடிதிருத்துபவர் - முடிதிருத்தும் தொழிலில் தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


காவலர் - அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஹெல்த் இன்ஸ்பெக்டர் - பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


 


வயது வரம்பு


முடி திருத்துபவர் - 18 முதல் 27 வயது


காவலர் - 18 முதல் 27 வயது வரை


சுகாதார ஆய்வாளர் - 18 முதல் 25 வயது வரை


 


எப்படி விண்ணப்பிப்பது?


முடித்திருத்துபவர், காவலர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து அனைத்து தேவையான ஆவணங்களுடன் முறையாக சேர்த்து, முறையாக சுய கையொப்பமிட்டு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.


முகவரி:


தலைமை அதிகாரி (BOO-I),


HQ சதர்ன் கமாண்ட் (BOO-I).



ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலைக்கு, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.


முகவரி:


கமாண்ட் ஆபீசர்,


431 ஃபீல்டு ஹாஸ்பிட்டல்,


பின்- 903431,


c/o 56 APO.


ஆங்கிலத்தில்:


Commanding Officer,


431 Field Hospital,


PIN- 903431,


c/o  56 APO.


மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 45 நாட்கள் வரை இருக்கும். இது வெளியிடப்பட்டது மே 7 என்பதால், ஜூன் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த முகவரிக்கு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவங்கள் சென்று சேர்வதற்கு நாட்கள் ஆகும் என்பதால் முடிந்த அளவு தபாலை ஜூன் ஆறாம் தேதிக்கு முன் அனுப்பி விடவும். பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பதாரர்களின் முழு விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்.