நுழைவுத் தேர்வு
இந்திய விமானப்படையில் பணிபுரிவதற்கு, சில பணிகளுக்கு இந்திய விமானப்படை நுழைவுத் தேர்வு (AFCAT) நடத்துகிறது. இந்த விமானப்படை பணிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நேற்று தொடங்கியது.
வேலை
- பறக்கும் பிரிவு (Flying Branch)
- (i).தரைப் பணி, தொழில்நுட்பம் சார்ந்து Ground Duty (Technical) Branch.
(ii).தரைப் பணி தொழில்நுட்பம் சாராதது Ground Duty (Non-Technical) Branches.
கல்வித்தகுதி:
1.பறக்கும் பிரிவு (Flying Branch)
12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக பட்டப்படிப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்
2.தரைப் பணி, Ground Duty
12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூபாய் 56,000 முதல் 1,10,700 வரை
தேர்வு செய்யப்படும் முறை-
*எழுத்து தேர்வு
*நேர்முகத் தேர்வு
*உடற்தகுதி தேர்வு
இறுதியில் அனைத்து தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
வயது வரம்பு:
பறக்கும் பிரிவு (Flying Branch) - 20 வயது முதல் 24 வயதுவரை
தரைப் பணி, Ground Duty - 20 வயது முதல் 26 வயது வரை
விண்ணப்ப கட்டணம்- ரூ. 250
விண்ணப்பிக்கும் கால அளவு- ஜீன் 1 முதல் ஜீன் 30, மாலை 5 வரை
விண்ணப்பிக்கும் முறைகள்:
1. விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்றIndian Air Force (cdac.in) " rel="dofollow">ndian Air Force (cdac.in) இணையதளத்திற்கு செல்லவும்.
2. அதில் விண்ணப்ப அறிக்கையை Notification_02_2022_English.pdfபதிவிறக்கம் செய்து தெளிவாக படித்து வேலை குறித்தான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளவும்.
3. பின்ndian Air Force (cdac.in) " rel="dofollow">ndian Air Force (cdac.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
Also Read: Job alert: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? – உங்களுக்கான அறிவிப்பு!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்