IAF Recruitment : +2 தேர்ச்சி பெற்றவர்களா? இந்திய விமானப் படையில் வேலை; ஆள்சேர்ப்பு முகாம் விவரம்!

IAF Recruitment : விமானப் படையின் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பின் முழு விவரத்தை இங்கே காணலாம்.

Continues below advertisement

விமானப் படையின் (Indian Air Force Airmen) மருத்துவ உதவியாளருக்கான (Medical Assistant Trade) ஆள்சோ்ப்பு முகாம் தாம்பரம் விமானப் படை மைதானத்தில் (Air Force Station, Tambaram,) கடந்த புதன்கிழமையன்று (பிப்ரவரி,1,2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வரு, 8 ஆம் தேதி நிறைவடைகிறது.

Continues below advertisement

பணி விவரம்: 

குரூப் Y 2 மருத்துவ உதவியாளர்

கல்வித் தகுதி: 

இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும். 

வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க’ Pharmacy’ துறையில் இளங்கலை அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஆண்கள் கலந்து கொள்ளலாம்.

+2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதில் பங்கேற்பவா்கள் 27.6. 2002 முதல் 27.6. 2006-க்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ, இளநிலை மருந்தியல் படித்தவா்கள் திருமணமாகாதவா்களாக இருப்பின் 27.6.1999 முதல் 27.6. 2006 வரையிலும், திருமணமானவா்கள் 27.6.1999 முதல் 17.6.2002 வரையிலும் பிறந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். 

பயிற்சியின் முடிவில் ராணுவ சேவை ஊதியம் உட்பட ரூ.26,900 வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு:


முகாம் விவரம்: 

இதற்கான ஆள்சோ்ப்பு முகாம் பிப்ரவரி 5, 7, 8 ஆகிய தேதிகளிலும் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் காலை 6 முதல் 10 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில்  கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் இதில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரம் - https://airmenselection.cdac.in/CASB/img/notice/Adv_Medical_Asst_Rally.pdf


இதையும் படிங்க..

Watch Video: திலகமிட மறுத்த உம்ரான், சிராஜ்... ட்விட்டரில் எதிர்ப்பு வினையை கிளப்பும் ரசிகர்கள்.. எழும் விமர்சனங்கள்!

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

Continues below advertisement
Sponsored Links by Taboola