இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரானது இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த தொடரை வெல்வதன் மூலம் அந்த அணிகள் உலக டெஸ்ட் சாம்பிடன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.


வரும் பிப்ரவரி 9ம் தேதி டெஸ்ட் தொடரானது தொடங்க இருப்பதால் நாக்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் நெற்றியில் திலகம் பூச மறுத்த வீடியோவை இணையத்தில் ஒருசிலர் பரப்பி எதிர்ப்பு வினையை வெளிப்படுத்தி வருகின்றன. 






நாக்பூருக்கு பயிற்சிக்கான இந்திய அணி ஹோட்டலுக்கு வந்தது. அப்போது, இந்திய அணியின் குழு உறுப்பினர்கள்,வீரர்கள் மற்றும் உதவியாளர்களின் நெற்றியில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் திலகமிட்டு வரவேற்றனர். அப்போது முகமது சிராஜ், உம்ரான் மாலிக், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ஹரி பிரசாத் மோகன் திலகமிட மறுப்பு தெரிவித்தனர். இது தற்போது டுவிட்டரில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


ட்விட்டரில் ஒரு சிலர், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு தேசத்தை விட அவர்களது மதம் தான் முக்கியம் என்று பலரும் டுவிட்டரில் குறிப்பிட்டு வருகின்றனர். ஏற்கனவே நீங்கள் உங்களது திறமையின் மூலமாக நாட்டிற்கு நிரூபித்துவிட்டீர்கள். இது போன்ற ஒரு சின்ன விஷயத்தால் நீங்கள் உங்களது நாட்டை நேசிக்கிறீர்களா? இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


மேலும் ஒருசிலர் இந்த வீடியோ மிகவும் பழைமையானது. ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் அணியில் உம்ரான் இடம்பெறவில்லை. இது சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து வெள்ளை பந்து போட்டிகளிலிருந்து இருக்கலாம் என்று குறிப்பிட்டனர். 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்கள் நாக்பூரில் தயாராகி வருகின்றனர். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் 9 மணிக்கு தொடங்கிறது. திருமணத்திற்கு பிறகு அணிக்கு திரும்பிய கே.எல். ராகுல் மற்றும் காயம் அடைந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் பயிற்சியை தொடங்கினர். 


ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 


டெஸ்ட் தொடர்:


பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்


ஒருநாள் தொடர்:


மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.


இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்