இளங்கலை பட்டதாரிகளுக்கு சென்னையில் காத்திருக்கும் பணி. விண்ணப்பிக்க பிப்.28 கடைசி தேதி!

சென்னை ஐஐடியில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், shortlisted மற்றும் interview மூலம் தேர்வு செய்யப்பட்டு  சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சென்னை ஐஐடியில் Language translator பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

Continues below advertisement

தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியாக இந்திய தொழில்நுட்பக்கழகம்  சென்னை இயங்கிவருகிறது. கடந்த 1959 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி அரசின் பணஉதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் சென்னை ஐஐடி நிறுவப்பட்டது. இந்திய அரசினால் தேசிய இன்றிமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும்.

இது இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தொடர்ந்து 3-வது ஆண்டாக தேர்வாகியுள்ளது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் தகுதிவாய்ந்த பல பேராசிரியர்கள் பணியாற்றிவரும் நிலையில், தற்போது Language translator பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கு அறிந்துகொள்வோம்.

சென்னை ஐஐடியில் Language translator பணிக்கானத் தகுதிகள்:

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை அல்லது முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Languages Required:

Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Odia, Punjabi, Sanskrit, Santali, Sindhi, Tamil, Telugu, Urdu..

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற ஆன்லைன் பக்கத்தில் முதலில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

பின்னர் விண்ணப்படிவத்தை எந்தவித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். இதோடு இப்பணிக்காக கேட்கப்பட்டிருக்கும் கல்வி, வயது வரம்பு, சமீபத்திய புகைப்படம், பணி முன்அனுபவம் குறித்த அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக உங்களது விண்ணப்ப படிவத்தில், அதிகாரிகள் உங்களை தொடர்புக்கொள்வதற்கான சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இறுதியில் அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்துக்கொண்டு விண்ணப்பத்தை வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், shortlisted மற்றும் interview மூலம் தேர்வு செய்யப்பட்டு  சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 30 ஆயிரம் முதல் ரூபாய் 60 ஆயிரம் என நிர்ணயம்.

இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் ஒப்பந்தக்காலத்தை நீட்டிக்கவோ அல்லது நிரந்தரம் செய்யவோ முடியாது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://jobstamil.in/wp-content/uploads/2022/02/IIT-Madras-Recruitment-2022-Notification-Details-1.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola