ஆதார் துறையில் காலியாக உள்ள Project Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், திறமையுள்ள பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட நாடான இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதாரின் முதல் நோக்கமாக உள்ளது. இதன் காரணமாக தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை எடுக்கும் பணி தீவிரமாக தற்போதும் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த  டிஜிட்டல் இந்தியாவில், ஒருவர் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும்  பெற வேண்டும் என்றாலும் ஆதார் எண் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இப்படி பல்வேறு சிறப்புகளைக்கொண்ட ஆதார் நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தற்போது Project Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.





ஆதார் துறையில் Project Manger பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி:


ஆதார் துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழங்களில் இந்த பணிக்குத் தொடர்புடைய B.Tech, B.E, M.Tech, MCA, MBA, PGDM போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


இதர தகுதிகள்:


இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் Project Management/ Software Project Management / executing Business Process Reengineering exercise போன்ற பிரிவில் Government Quasi அல்லது Government அல்லது Public Sector undertakings போன்றவற்றிற்காக குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், http://careers.nisg.org/job-listings-project-manager-state-jaipur-uidai-nisg-national-institute-for-smart-government-jaipur-5-to-10-years-080222002535  என்ற இணையதளப்பக்கத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, முன் அனுபவம் குறித்த தகவல்களை தவறில்லாமல் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.


இதோடு தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.


விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்னதாக அனைத்து தகவல்களும் சரியாகஉள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – பிப்ரவரி 28, 2022


தேர்வு முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


இவ்வாறு தேர்வாகும் நபர்கள், கிராமப்புறப்பகுதிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டும் எனவும், கணினி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் கையாள்வதில் திறமைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம்:


நேர்காணல் முறையில் தேர்வாகும் நபர்களுக்கு, தகுதி மற்றும் பணியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த வாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://careers.nisg.org/job-listings-project-manager-state-jaipur-uidai-nisg-national-institute-for-smart-government-jaipur-5-to-10-years-080222002535 என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்